கோபத்தை குறைப்பதற்கான வழிமுறைகள்

கோபத்தைத் தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள் கீழே காண்போம்.

கோபம் இவற்றின் காரணங்களால் வருகிறது
1. ஆசையின் வெளிப்பாடு
2. ஏமாற்றத்தின் எதிரொலி
3. கற்பனையான பயம்தான் சீனம்
கோபம் ஏன் வருகிறது?
நமது ஆசைக்கு தடை ஏற்படும் போது, வேகம் ஆகிறது. நம் கோபம் நம்மையே எரிக்கும் குணமுடையது.

சினமுற்றவர்கள் செய்யக்கூடாதவை என்ன?
1. கோபப்படுபவர்கள் அருகில் நிற்கக் கூடாது.
2. கோபப்படுபவர்களின் வார்த்தைக்கு வார்த்தை பதிலளித்து மோதலுக்கு தயார் ஆகாதீர்கள்.
3. கையில் எந்த ஒன்றையும் வைத்துக் கொள்ளாதீர்கள்.
4. கோபமாக இருக்கும் போது வாகனங்களை ஓட்டாதீர்கள்.

கோபத்தை எப்படி அடக்குவது?
• பொறுமையாக இருக்க யோகா(சங்கல்பம்) மேற்கொள்ளுங்கள்.
• அன்பு, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, சமநோக்கு, தியானம், வாழ்த்துதல் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
• "பிறர் அறியாமையை உணருங்கள்."
• பிறர் குறைகளை எண்ணாமல், நிறைகளை மட்டும் எண்ணுங்கள்.
• யார் யார் மீது சினம் வருகிறது என்பதை பட்டியலிட்டு, இனி அவர்கள் மீது கோபம் கொள்ள மாட்டேன் என்று, வைராக்கியம் கொள்ளுங்கள்.
கோபத்தை ஒழிக்க முடியுமா?
"ஒழிக்க முடியாது, தவிர்க்கலாம்"

சில நேரங்களில் நம் மீது எந்த தவறும் இருக்காது ஆனால் மற்றவர்கள் நம்மீது கோபப்படுவார்கள்.

மற்றவர்கள் கோபத்தில் இருந்து எப்படி தப்பிப்பது?
1. உடனே ஆழ்ந்து மூச்சு விடுங்கள்.
2. அந்த இடத்தை விட்டு வெளியே வந்து, சிறிது நேரம் நடக்கவும்.
3. சிறிது நேரம் உறங்கலாம்.
4. முகத்தை கழுவிக் கொள்ளலாம்.
5. குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

மேற்கூறியவற்றை நாம் செய்யும் பொழுது மற்றவர்கள் கோபத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...