Harry Potter-Noval |
ஹாரி பாட்டரும் ரசவாதக் கல்லும்
சர்வதேசப் புகழ்பெற்றுள்ள ஹாரி பாட்டர் வரிசை நூல்களில் பாட்டரும் ரசவாதக் கல்லும் ' என்ற இப்புத்தகம் முதலாவதான ' ஹாரி ஹாரி பாட்டர் என்ற இளம் மந்திரவாதியைப் பற்றியது . ஹாரி பாட்டர் ஹாக்வார்ட்ஸ் மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளியில் சேர்ந்து ஒருசில நெருக்கமான நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதித்துக் கொள்கிறான்.ஹாரி பாட்டரின் தாய் தந்தையை ஈவு இரக்கமின்றிக் கொன்ற தீய மந்திரவாதியான லார்ட் வோல்டமார்ட், தான் இழந்த சக்தியை மீண்டும் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் போது. ஹாரி பாட்டர் தன் நண்பர்களின் உதவியுடன் அதை எவ்வாறு முறியடிக்கிறான் என்பதுதான் இக்கதை.
பக்கத்திற்குப் பக்கம் மாயாஜாலம் , சாகசங்கள் , நகைச்சுவை , திகிலான திருப்பங்கள் நிறைந்துள்ள, மறக்க முடியாத கதாபாத்திரங்கள் உலா வருகின்ற, கோடிக்கணக்கான சிறுவர் சிறுமியரின் நெஞ்சைத் தொட்டுள்ள அற்புதமான நூல் இது.
67 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்புத்தகம் இப்போது முதன்முதலாகத் தமிழில் வெளிவருகிறது . இப்புத்தக வரிசை மொத்தம் 45 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளது .
Super
ReplyDeleteஇங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...