About

           🙏 அன்பு வணக்கம்.. நமது "123eBook Library"  அன்புடன் வரவேற்கிறோம்! 💐

அனைவரிடமும் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதே நமது குழுவின் நோக்கம்.

வாசிப்பு தேடல் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை பொருளாதார சூழல் காரணமாக வாங்க முடியாத சூழலில் இருக்கலாம். அத்தகையவர்களுக்கும், வசதி இல்லாதவர்களுக்கும் தரமான நூல்கள் இலவசமாகவே கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்த நூலகத்தின் குறிக்கோள்.

இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் புத்தகங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நல்ல புத்தகங்களை வெளியிட்ட நூலாசிரியருக்கு உங்கள் நன்றியை தெரிவிக்க விரும்பினால் அந்த புத்தகத்தை விலைக்கு வாங்குங்கள். உங்களுக்கு ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும் நூல்களை பணம் செலுத்தி வாங்குவதன் மூலமாக அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளரை நாம் ஊக்கப்படுத்த முடியும்.

அவ்வாறு ஊக்கப்படுத்தும் போதுதான் இதையே நம்பி வாழும் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் பயன்பெறுவர். நல்ல புத்தகங்கள் வெளிவர இவர்கள்தான் காரணம். இவர்கள்தான் தேசம் கடந்து நல்ல படைப்புகளை மொழிபெயர்த்து நமக்காக தமிழில் வெளியிடுகிறார்கள் என்பதை நாம் அனைவரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை காகித (Paper Book Format) புத்தக வடிவிலும், இ-புத்தக (eBook) வடிவிலும் வாங்கலாம். புத்தகங்களை அருகில் இருக்கும் கடையிலோ அல்லது இணையத்தளத்திலோ (Online Stores களிலோ) நாம் வாங்கிக் கொள்ள முடியும்.

இங்கு எல்லா நூல்களும் மின்நூலாக்கப்படவில்லை, மின்நூலாக்கவும் முடியாது.. மின்நூலாகவும் கிடைக்காது. எனவே அனைத்து நூல்களும் இங்கு இலவசமாகவே கிடைக்கவேண்டும் என நாம் எதிர்பார்ப்பது நியாயமில்லை. இங்கு கிடைக்காத நூல்களை நூலகம் சென்று படியுங்கள். அல்லது புத்தகக்கடையில் வாங்கியும் படிக்கலாம்.

இந்த செயல்பாட்டு சேவைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களையும் நமது குழுவில் இணையச் சொல்லுங்கள். அவர்களும் பயன் பெறட்டும். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி..

இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படும் அனைத்து புத்தகங்களும் இணையதளத்தில் பரவலாக இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் மட்டும் தான். நான் எந்த மின்-புத்தகத்தையும் உருவாக்குவதில்லை. எனவே இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்து ஆட்சேபணைகள் வரும் பட்சத்தில் அப்பதிவு உடனடியாக நீக்கப்படும். புத்தகம் படிக்கும் பழக்கத்தினை அனைவாிடமும் ஏற்படுத்துவது என்பதே ஒரே நோக்கம்.

நல்லதே நினைப்போம்!.. நல்லதே நடக்கட்டும்!!..

🔎உங்கள் தேடலை இனிதே தொடங்குங்கள்..


எங்களைத் தொடர்புகொள்ள,
mohanathan2013@gmail.com
Or
Contact Us     



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.