1990களில் பள்ளிப் படிப்பை முடித்த மூன்று தோழிகளின் கதை இது. நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று மாணவிகள் எப்படி நண்பர்கள் ஆனார்கள், அவர்கள் வளர்ப்பு, பின்னணி, ஆசை, கனவு, பள்ளி, படிப்பு காதல் முதலானவை பற்றிச் சொல்லும் டைரி இது. எப்போதும் சிரிப்பு, சில நேரம் வருத்தம் என்று வாழ்க்கையில் மிக இனிமையான, அழகான நாட்கள் அவை என்று அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. சமூக ஊடகங்களின் வரவுக்கு முந்தைய அந்தக் காலகட்டத்தில் அவர்கள் அத்தனை சந்தோஷமாக இருந்தார்கள். அவர்களைப் பாதித்த நிகழ்வுகள், அவர்கள் நெகிழ்ந்த தருணங்கள், வருத்தப்பட்டு அழுத சம்பவங்கள் இவற்றின் சுவாரஸ்யத் தொகுப்புதான் இந்த
தேடி எடுத்த டைரி
கூ.மு: 1990 – 1996
கூ.மு: கூகுளுக்கு முன்
ரம்யா, ரா ரா என்ற பெயரில் தமிழில் கதைகளையும் புதிய சிந்தனைகளையும் எழுதிவருகிறார். தான் சந்தித்த அனுபவங்கள், தன்னை பாதித்த நிகழ்வுகள் ஆகியவற்றைக் கதைகளாகவும் சிந்தனைத் தெறிப்புகளாகவும் எழுதிவருகிறார். இவர் "ரா ரா கதை நேரம்" "ரா ரா ஸ்டோரி டைம்" (Raa Raa Story Time) என்ற வலையொலி (Podcast) மூலம் வித்தியாசமான, சுவாரஸ்யமான, சிறுவர் கதைகளையும் எழுதி, அவரே சொல்லியும் வருகிறார்.
இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...