விற்பனையில் சாதனை புரிய வேண்டுமா? வெற்றிகளை அள்ளி குவிக்க வேண்டுமா? அப்போது இந்த மாபாதகங்கள் செய்ய கூடாது. இந்நூல் எளிய முறையால் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைய பெற்றது இப்புத்தகத்தின் கூடுதல் மதிப்பு ஆகும். ஆசிரியன் சதிஷ் கிருஷ்ணமூர்த்தி ஏழுத்துக்களுக்கு தனி கூடம் உண்டு .
மார்க்கெட்டிங் மாயாஜாலம், விளம்பர மாயாஜாலம் ஆகிய நூல்களின் ஆசிரியரான சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள சுவையான நூல் இது.
நூலின் தொடக்கத்திலேயே 14 பிராண்டுகளின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அவை இப்போது சந்தையில் இல்லாத தோற்றா பிராண்டுகள். அவை ஏன் வெற்றிபெற முடியவில்லை என்ற கேள்வியுடன் தொடங்குகிறது இச்சிறு நூல். அதற்கான காரணங்களையும் தனது கோணத்தில் விவரிக்கிறார் நூலாசிரியர்.
இந்த தோல்விக்கு காரணம், மார்க்கெட்டிங் பஞ்சமா பாதகங்கள்தாம் என்கிறார் அவர். அவற்றை தொழில் முனைவோர் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
அவை இவைதாம்:
- Ø சந்தைப் போக்கில் சறுக்கல்
- Ø பொசிஷனிங்கில் சொதப்பல்
- Ø பிராண்ட் எக்ஸ்டென்ஷன் உளறல்
- Ø போட்டியாளர்களிடம் பேத்தல்
- Ø பிராண்ட் வளர்ப்பில் வழுக்கல்
இவை பற்றி ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளுடன் சுவையாக நூலைக் கொண்டு சென்றிருக்கிறார். நகைச்சுவை ததும்பும் நடை. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
முனைவின் ஆலோசனை:
தொழில் முனைவோர், மேலாண்மை மாணவர்கள், விற்பனை பிரதிநிதிகள், சந்தையியல் மாணவர்கள், இளம் அதிகாரிகள் விளம்பரத்துறை ஆர்வலர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...