உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பைத் தூண்ட உதவும் நூல் இது.
1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்தரம் அடைந்தது. உலகத்தைக் கடல் வழியாக முதன் முதலில் வலம் வந்தவர் மெகல்லன். முதலாம் பானிபட் போர் 1526-ம் ஆண்டு நடைபெற்றது. உலகில் ஏழாவதாகக் கண்டறியப்பட்ட கண்டம் அண்டார்டிகா... இவை மட்டும் வரலாறு அல்ல. இவை நம் பாடப்புத்தகத்தில் நிரம்பியுள்ள வரலாற்றுத் தகவல்கள். உண்மையில் வரலாறு என்பது அவ்வளவு சுவாரசியமானது, சுவையானது, சிலிர்ப்பூட்டுவது, அச்சமூட்டுவது, நெகிழச் செய்வது, மகிழச் செய்வது, கலகலவெனச் சிரிக்கவும் வைப்பது.
புன்னகை தரும் வரலாற்றுப் பக்கங்களை மட்டும், நாம் இந்தப் புத்தகத்தில் படிக்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம்.
சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0-க்கு வாசகர்கள் அளித்த அமோக ஆதரவைத் தொடர்ந்து பகுதி 2 வெளியாகிறது.
இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...