சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். இவர் 2019ஆம் ஆண்டு ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம்பெற்றார்.
- உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
- ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.
இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...